காத்தான்குடி அரசியல் கண்ணோட்டம் – 22.03.2010
Posted by Kattankudi Web Community (KWC) on 23/03/2010
கடந்த வார அரசியல் நிலைகள் வாசகர்களுக்காக தொகுத்துத் தரப்படுகின்றன.
பிரதான வேட்பாளர்களான ஹிஸ்புல்லாஹ், முபீன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஜவ்பர் கான் ஆகியோர் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களை இலக்கு வைத்து நேரடியான பிரச்சாரத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இவர்கள் ஆதரவாளர்கள் புடை சூழ நேரடியாக விஜயம் செய்து வாக்காளர்களை சந்தித்து தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
ஹிஸ்புல்லாஹ் அவர்களது பிரச்சாரத்தை நோக்குவோமாயின், மூன்று பெரிய பொதுக் கூட்டங்களையே நடத்தவிருப்பதாக ஏற்கெனவே இவர் தீர்மானித்திருந்தார். ஒரு கூட்டம் கடற்கரைப் பகுதியில் ஏற்கெனவே நடத்தப்பட்டுவிட்டது. இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யும் தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஜனாதிபதியை பங்கேற்கச் செய்ய முயற்சிப்பது என்று ஹிஸ்புல்லாஹ்வின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருப்பவர்களுள் ஒருவர் கூறினார். மூன்றாவது கூட்டம் பிரச்சார நடவடிக்கைகள் முடிவுறும் இறுதி இரவு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய அனைத்து கூட்டங்களும் சிறு சிறு பிரதேசங்களை மையப்படுத்தி சிறு கூட்டங்களாகவே நடாத்தப்படுகின்றன.
இடையில் நேற்றிரவு கலாச்சார மண்டபத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு ஒன்று ஹிஸ்புல்லாஹ்வினால் நடத்தப்பட்டது. இதில் இறுவட்டு (CD) வடிவில் அவரது தனிப்பட்ட விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. முழு மட்டக்களப்பு மாவட்டத்தினதும் கல்வி, சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யக்கூடிய திட்டங்கள் இவ் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மட்டு மாநகரசபை முதல்வர் சிவக்கீதா பிரபாகரன் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியை உறுதி செய்ய தான் அயராது பாடுபடுவதாக அவர் கூறினார்.
இங்கு உரையாற்றும் போது நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பற்றி குறிப்பிட்ட ஹிஸ்புல்லாஹ், சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த தாம் பாடுபட்டுக்கொண்டிருப்பதோடு கணிசமான தமிழ் மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டிருப்பதை விரும்பாத தீய சக்திகள் இவ்வாறான செயற்பாடுகளினூடாக இரு சமூகங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி தனது வெற்றியைய்ம் தடுக்க முயற்சிப்பதாகவும் மக்கள் இவ்வாறான சதிகளில் அகப்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் பரவலாக கூடங்களை நடத்தி வருகிறது. முபீன் அவர்கள் கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களிலும் தனது பேச்சின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஹிஸ்புல்லாஹ்வை தாக்கிப் பேசுவதை அவதானிக்க முடிகிறது. இது மக்களை எரிச்சலூட்டியிருக்கிறது. ஹிஸ்புல்லாஹ் இதுவரை எதிர்த்தரப்பு வேட்பாளர்களை பகிரங்கமாகத் தாக்கிப் பேசாத நிலையில், முபீன் இவ்வாறு தொடர்ந்து பேசி வருவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனிடையில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) அனுசரணையுடன் தமிழ் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் ஒன்று பற்றி பல தகவல்கள் கிடைத்துள்ளன. வேட்பாளர்களின் இடையே நிலவும் விருப்பு வாக்குப் போட்டியை சுமூகமாக தீர்த்து வைக்கவே தான் மட்டக்களப்புக்கு செல்வதாக ஊடகங்களுக்கு கருணா தெரிவித்திருந்தார். முஸ்லிம்கள் அரச தரப்பில் பிரதிநிதிகளையும் அமைச்சர்களையும் கொண்டிருந்து யுத்த காலத்திலும் கூட பல அபிவிருத்திகளைக் கண்டுள்ளனர் நாமும் அதே போன்று அரச தரப்பில் இணைந்து எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கருணா வெளிப்படையாக பல இடங்களிலும் பேசி வருகிறார். தற்போது லண்டனிலிருந்து திரும்பி தேர்தலில் போட்டியிடும் கணேசமூர்த்தியை ஆதரித்து அனைத்து தமிழ்ப் பிரதேசங்களிலும் ஒரு விருப்பு வாக்கை அவருக்கு இடுமாறு பிரச்சாரம் செய்ய ஏனைய தமிழ் வேட்பாளர்களை சம்மதிக்கச் செய்யும் முயற்சியில் கருணா பெருமளவு வெற்றி பெற்றுள்ளார்.
இவ்விடயம் ஆளும் தரப்பு முஸ்லிம் பிரதிநிதித்துவம் எனும் கோட்பாட்டை அபாயத்துக்குள்ளாக்கும் அளவுக்கு கடந்த வாரங்களில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆளும் தரப்பு பிரதான வேட்பாளர்களான அமீர் அலியும் ஹிஸ்புல்லாஹ்வும் தத்தமது சொந்த இடங்களில் மட்டுமே கணிசமான வாக்குகள் பெறுவர், மேலும் முஸ்லிம் பிரதேசங்களில் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கிடைக்கும். தமிழர்கள் ஆயிரக்கணக்கில் எமக்கில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்று ஹிஸ்புல்லாஹ்வின் தரப்பு தெரிவித்தாலும், ஆயிரக்கணக்கான தமிழ் வாக்குகளை இவர் திரட்டுவதென்பது பகற்கனவாகவே அமையப் போகிறது.
ஆனாலும் தமிழ்த் தரப்பு திட்டமிட்டு செயற்படுமிடத்து 30,000 விருப்பு வாக்குகளை ஆளும் தரப்பு வேட்பாளர் ஒருவருக்கு திரட்டுவது அவர்களுக்கு இலகுவாகவே அமையும் என்பதுடன், இந்த எண்ணிக்கையை ஹிஸ்புல்லாஹ்வோ அமீர் அலியோ அடையப் போவதில்லை என்பது வெளிப்படை. இதை வேட்பாளர்களும் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. அமீர் அலி காத்தான்குடியில் வைத்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழக்கப்படுமாயின் காத்தான்குடி சமூகமே பொறுப்பு என்று தெரிவித்திருக்கும் கருத்தும் இதனை வலியுறுத்துகின்றது.
இவ்விடத்தில் ஒரு விடயத்தை நாம் குறிப்பிட வேண்டும் எந்த அரசியலாளரும் தான் தமது மக்களுடன் சரியான உறவுகளைப் பேணாமலும் அவர்களைப் பாதிக்கும் செயற்பாடுகளையும் வேறு பிரதேச அரசியலாளர்களுடன் முரண்பட்டு அவரது பிரதேச மக்களிடம் ஆதரவை இழந்து நிற்பதற்கோ அல்லது தமது பிரதேசத்தில் ஏனைய அரசியலாளருக்கு எதிரான விளைவை ஏற்படுத்தும் செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்திவிட்டு, தேர்தல் காலங்களில் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்றோ எல்லாப் பிரதேச மக்களும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோருவதோ அல்லது பிரதிநிதித்துவம் பறிபோனால் ஒரு பிரதேச மக்களே பொறுப்பு என அறிவிப்பதோ நகைப்புக்கிடமானது. உதாரணமாக அமீர் அலி அவர் பிரதேச வாக்காளர்களிடம் உரிய உறவுகளைப் பேணவில்லை என்பதும் சரியாகப் பேசுவதில்லை என்பதும் பொதுவான குற்றச்சாட்டுகளாக இருக்கும் நிலையிலும் பிரதேசவாதத்தின் உச்சமாக காத்தான்குடி வர்த்தகர்களை ஓட்டமாவடி பசாரிலிருந்து வெளியேற்றி சுத்திகரிப்புச் செய்த அமைச்சர் இன்று வெற்றி கேள்விக்குறியாகி விட்ட நிலையில் எம்மை நோக்கி விரல் நீட்டுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரம்ப காலம் தொட்டே ஹிஸ்புல்லாஹ்வின் வாக்கு மாறலினால் ஏறாவூர் ஓட்டமாவடி மக்கள் அவருக்கு எதிராக இருப்பதற்கு அவரே பொறுப்பாகும். அனைவரும் தத்தமது விதைப்புகளுக்கான பழங்களை அறுவடை செயத் தயாராகிறார்கள்.
அலி சாஹிர் மௌலானாவுக்கு தமிழ் வாக்குகள் கிடைக்கும் அவர் முஸ்லிம் வாக்குகளையும் பெற்று வெற்றி பெறுவார் எனும் கருத்துகளும் உலவுகின்றன. நடைமுறையில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் அவரை வெற்றியை நோக்கி செலுத்துமளவுக்கு தமிழ் வாக்குகளைப் பெறுவார் என்பது அறவே நடைமுறைச் சாத்தியமற்றதாகும். முஸ்லிம்கள் இன ஐக்கியத்தையோ அல்லது எந்த நோக்கத்தையோ கொண்டு தமிழர் ஒருவருக்கு வாக்களிப்பார்களா? எனும் கேள்வியை நாம் எம்மிடமே கேட்போமாயின், இதற்கான விளக்கம் எமக்குத் தெளிவாகும்.
கிரான்குளம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஹிஸ்புல்லாஹ்வின் சுவரொட்டிகள் சாணியடிக்கப்பட்டிருப்பதோடு, அவரது படத்துக்கு திருநீறு போன்று தோற்றமளிக்கும் கோடுகள் நெற்றியில் வரையப்பட்டிருக்கின்றன. இதுவும் அவருக்கு எதிராக தமிழ்ப் பிரதேசங்களில் தோன்றியிருக்கும் நிலையைக் காட்டுகிறது. மேலும் கடந்த வார துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அரசியல் காரணங்களுக்காக இருக்குமாயின், இரு சமூகங்களையும் குழப்பி முஸ்லிம் வேட்பாளர்கள் பெறச் சாத்தியமுள்ள சில நூறு தமிழ் வாக்குகளையும் இல்லாமல் செய்வதே அதன் நோக்கமாக இருக்கும்.
மேலும் செலிங்கோ கடன் விவகாரம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக பூதாகரமாக உருவெடுத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. உறுதிப்படுத்த முடியாத தகவல் ஒன்று பிரச்சாரத்தின் இறுதி வாரத்தில் ஹிஸ்புல்லாஹ்வின் பிரச்சாரக் கூட்டங்களின் போது செலிங்கோ முதலீட்டாளர்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறது. இது போன்ற காரணங்களால் அவசரமாக தனக்கு சார்பான முதலீட்டாளர்கள் சிலரைக் கூப்பிட்டு கூட்டம் ஒன்றை நடத்திய ஹிஸ்புல்லாஹ், தான் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநரிடம் அவர்களைக் கூட்டிச் செல்ல இருப்பதாகவும் ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
இவ்விடத்தில் செலிங்கோ தொடர்பான விடயத்தின் உண்மை நிலையை விடுத்து தத்தமது கருத்துகளுக்கு வாய்ப்பாக அதைப் பாவிக்கும் விடயத்தை அனைத்து அரசியலாளர்களும் செய்து வரும் நிலையில், இது தொடர்பான சில தரவுகள் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இங்கு தொகுக்கப்படுகின்றன:
> செலிங்கோ நிறுவனத்தின் இஸ்லாமிய நிதி நிறுவனக் கிளையை ஊரில் திறப்பதில் ஹிஸ்புல்லாஹ் முக்கிய பங்கு வகித்திருந்தார். முதல் நாள் கரும பீடத்தில் இவர் நின்று வாய்ப்புகளைக் கையேற்ற புகைப்படம் எமது யாஹூ குழுவுக்கு உறுப்பினர் ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
> ஹிஸ்புல்லாஹ்வின் மனைவியினால் செலிங்கோ இந்நிறுவனத்தில் தொழில் முயற்சிகளுக்காக பெரும் தொகைக் கடன் பெறப்பட்டிருந்தது. இக்கடனுக்கு விமான நிலைய மற்றும் வான் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக இருந்த போது, கடன் கோருபவரை தனக்கு நன்கு தெரியும் என்றும் கடனை அவர் செலுத்தத் தவறும் பட்சத்தில், தான் அதைச் செலுத்துவேன் என்றும் உறுதிப்படுத்தி கடிதங்களை வழங்கியதோடு பிணைப் பத்திரங்களிலும் ஹிஸ்புல்லாஹ் கையொப்பமிட்டிருந்தார்.
> நாளடைவில் கடன் செலுத்தப்படவில்லை தற்போது மொத்த நிலுவையாக 96 மில்லியன் ரூபாய் (ஒன்பது கோடி அறுபது இலட்சம்) இருக்கிறது. ஹிஸ்புல்லாஹ்வின் மனைவியின் தரப்பு தொழில் முயற்சிகள் நட்டமடைந்து விட்டதால் கடனைச் செலுத்த முடியாது என்று தெரிவித்து விட்டது. வழக்கறிஞர் ஊடாக கடனைச் செலுத்துமாறு ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு செலிங்கோ அனுப்பிய கடிதத்க்கு பதிலளித்த அவரின் வழக்கறிஞர், இக்கடனுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.
> இதனிடையே ஹிஸ்புல்லாஹ்வின் சிபாரிசின் பேரில் செலிங்கோவில் பணியாற்றி அலுவலக நடைமுறைகளை மீறி கடன்களை வழங்கிய இருவரின் உதவியுடன் கடன் தொடர்பான ஆவணங்களின் மூலப்பிரதிகள் அடங்கிய கோப்புகள் ஹிஸ்புல்லாஹ்வினால் அகற்றப்பட்டு விட்டமையால், சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இந்நிறுவனம் இருக்கிறது.
> சிறிது காலத்துக்கு முன்னர் செலிங்கோ கூட்டியத்தின் முக்கிய நிறுவனமான கோல்டன் கீ நிறுவனம் பெறும் நிதி மோசடியில் சிக்கியதையும் அதன் உரிமையாளர் தேசமான்ய லலித் கொத்தலாவல சிறைப்பிடிக்கப்பட்டமையும் அனைவருக்கும் தெரிந்ததே. இதனை அடுத்து செலிங்கோவின் அனைத்து நிதி நிறுவனங்களும் வந்குரோத்தாகி மூடப்படும் நிலையை எதிர்கொண்டன. செலான் வங்கி மட்டும் மத்திய வங்கி தலையிட்டு அதைக் கையேற்றதால் தப்பித்தது.
> நாடு முழுவதும் பல நூறு கோடி நிதியை செலிங்கோ இஸ்லாமிய நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட முஸ்லிம் முதலீட்டாளர்கள் இதுவரை எவ்வித தீர்வுமின்றி அங்கலாய்க்கின்றனர். காத்தான்குடியில் மட்டும் பதினோரு கோடி அளவிலான வைப்பீடுகள் செய்யப்பட்டிருந்தன.
> செலிங்கோ நட்டமடைவதற்கு ஹிஸ்புல்லாஹ்வே காரணம் என்பது போன்ற ஒரு கதையை உருவாக்க அவருக்கு எதிரான சக்திகள் முயல்கின்றன. கடந்த வாரம் வெளிவந்த ‘வங்கிக் கள்ளனுக்கா வாக்கு?’ என்ற தலைப்பிட்ட அனாமேதய துண்டுப் பிரசுரம் இதையே செய்ய முயற்சிக்கின்றது.
> செலிங்கோ நட்டமடைந்து மூடப்பட்டதற்கு ஹிஸ்புல்லாஹ் காரணமல்ல என்பதை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றாலும், அவரது மனைவியின் பெயரில் பெறப்பட்ட கடனில் திட்டமிடப்பட்ட முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது உண்மையாகும். கடனாளியின் கணவர் என்ற முறையிலும் கடனுக்குப் பிணை நின்ற ஒருவர் என்ற வகையிலும் இக்கடனை மீளச் செலுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் ஹிஸ்புல்லாஹ் எடுக்கவில்லை. அவர் அவ்வளவு வறுமையில் இருப்பதாகவும் தெரியவில்லை. உதாரணமாக பல கோடி மதிப்புள்ள பல ஆடம்பர வாகனங்களை அவர் சொந்தமாக வைத்துப் பாவிக்கிறார்.
> மேலும் ஹிஸ்புல்லாஹ்வின் மனைவி கடனைத் திருப்பிச் செலுத்தினால் காத்தான்குடியைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் வைப்புகள் திருப்பிக் கொடுக்கப்படும் எனும் தவறான கதை ஒன்று பரப்பப்படுகிறது. செலிங்கோ இஸ்லாமிய நிறுவனத்தின் முழு நட்டமும் ஒன்றாகவே நோக்கப்படுமே தவிர ஒருவர் செலுத்தும் கடன் நிலுவையை வைத்து ஒரு பிரதேச முதலீட்டாளர்களின் பணம் மீளளிக்கப்படும் என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்றது.
> ஊருக்கு வங்கிக் கிளையை கொண்டு வருவதில் பங்காற்றியவர் என்ற வகையில் மக்கள் பணத்தை இழந்ததில் தனக்குள்ள தார்மீகப் பங்கை ஏற்று அதை மீளப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை எதயாவது ஹிஸ்புல்லாஹ் ஏற்கெனவே செய்திருக்க வேண்டும். மாறாக நீங்கள் யாரும் என்னிடம் வந்து முறையிடவில்லை, நீங்கள் பாதிக்கப்பட்டதோ வங்கி மூடப்பட்டதோ எனக்கு தெரியாது என்பது போன்ற கதைகள் உதவப்போவதில்லை. அதாவது இப்போது ஹிஸ்புல்லாஹ் நடத்திய கூட்டம் முற்றாக அரசியல் சுயலாபம் கருதியதே தவிர வேறில்லை. அத்துடன் வேறு எந்தவொரு அரசியலாளரும் ஹிஸ்புல்லாஹ்வை இவ்விடயத்தில் விமர்சிப்பதிலும் குற்றம் சாட்டுவதிலும் காட்டும் ஆர்வத்தை நட்டப்பட்ட மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் காட்டி இதுவரை எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஆகவே அனைவரும் இதில் அரசியல் செய்கின்றனரே தவிர மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
> அத்துடன் செலிங்கோ கூட்டியத்தின் எந்த நிறுவனத்தின் முதலீட்டாளருக்கும் எந்தவொரு நிதி மீளமைப்பும் இதுவரை வழங்கப்படாத நிலையிலும் செலிங்கோ இஸ்லாமிய நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிலையிலும் முதலீட்டாளர்களுக்கு உடனடித் தீர்வு எதுவும் கிடைப்பது சாத்தியமற்றது. மத்திய வங்கிக்கு சென்றால் அங்கு முறைப்பாட்டை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியில் பலமான தமிழ் வேட்பாளர்கள் எவரும் இல்லாத நிலையில் அது பெறப்போகும் ஒரு பிரதிநிதி முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்தவராகவே இருக்கப்போகிறார் விருப்பு வாக்குகள் அடிப்படியில் நோக்கினால், அது பசீர் சேகு தாவூதாகவே இருப்பார் என்றே தற்போதைய நிலையில் தோன்றுகிறது. அவ்வாறாயின் அவர் வாக்குகளின் ஊடாக தெரிவாகும் முதல் சந்தர்ப்பம் இதுவாகவே இருக்கும்.
ஏற்கனவே எதிர்வு கூறப்பட்ட TNA:UNF:UPFA – 3:1:1 என்ற உறுப்பினர் விகிதம் மாறும் என்று சொல்லுமளவுக்கு நிலைமைகளில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை ஆயினும், UPFA உறுப்பினர் முஸ்லிமாக இருப்பாரா என்பதில் கேள்விக்குறி தோன்றியிருப்பதே இவ்வார முக்கிய திருப்பு முனையாகும்.
காத்தான்குடியிலிருந்து kattankudi.info செய்தியாளர்
எவ்வித மாற்றமின்றியும் முழுமையான இணையத்தள முகவரியுடனும் மீள்பிரசுரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.







ihsan said
Tna:Upf=3:2[baseer,lebbai haji] definetly upfa cant one seat.
kattankudi said
Dear Bro Ihsan: what are you trying to say, upfa will not get a seat? Study past results and check how many votes needed if unf wants to get 2 seats.
Son of kky said
அப்போ நாங்க சிலின்கோ வில் போட்ட காசு அம்போ தானா?
Son of kky said
மக்களுக்கு இவன்க ஆட்சிக்கு வரவேண்டிய அவசியமே இல்லை. போட்ட காசு கையில் கிடைச்சா போதும். அப்போ இவ்வளவு நாலும் நம்ம ஊரிலே பம்மாத்து அரசியல் தானா நடக்குது?
Mohamed Ashraff said
There is no possibility to get 30,000 votes for a Tamil Candidate
If he get 30,000 UPFA will get 3 Seats Hisbullah and Ameerali will go through
Last time Ganesamoorthy got less than 9000 Votes. So if UPFA win one seat that will be a muslim candidate.
kattankudi said
Dear Brother Ashraff: The ground situation this week is changing. We are not telling a Tamil candidate will get 30,000 votes, but IF the Tamils work it out and make it possible, none of our candidates can reach this level.
You may refer the number of pref votes our candidates obtained in past elections. Also you may aware the massive total Tamil vote base and how thy manage to secure 4 seats in the past poll, despite all predictions.
Hence the news is written from pure and impartial analysis of ground situation.
Thanks
WebAdmin
kattankudy rock said
kattankudy info ku news podura brothers ku neenka enna than thala keela nindalum insha allah april 9 insha allah M.L.A.M.HIZBULLAH than minister a varuvaru neenka ellarum thooku pottu saha veandi vanthalum varum ethukum ready ya irunka
kattankudi said
Dear rock (what a name?): our news is written based on the reports from the ground. We are not in favour or against any politician and therefore no need to hang ourselves when Hizbullah becomes minister. You should check all the news on the site to find our neutral stand.
For your kind information, in a parliament election first round of counting will be finished in the early morning hours of the following day of elections (i.e., in upcoming General Election it is 9th), when its agreed without objections, the preferential vote counts begin. If this second round is also pass without objections only we will get the names of members officially. Possibly in the evening of 9th.
The cabinet of ministers will be announced and take oath in a few days from this as our majority community stick to religious auspicious time to good thinks.
Therefore, on 9th of April 2010, it is not possible to anyone to become a new minister.
Thanks
WebAdmin
Son of kky said
Rock Kattankudy Rob? neenka enna josiyakkaraa???
முதல்ல உங்க தாஜுல் மில்லத்தீனை [சிலின்கோ மில்லத்]atleast M.P ஆகச்சொல்லுங்க.பிறகு பார்ப்போம் அவருக்கு Minister Post கொடுக்கலாமா இல்லயாயென்று? உண்மையை சொண்னால் உங்களுக்கு உரைக்குத்தோ??
யாரு தூக்கு போடுவார்கள் என்று பொறுதிருந்து பார்ப்போம்? வெண்டாலும் அரை மினிஸ்டர் தாண்ட்டோ கொடுப்பான். கூய்டா கூய்!!!
Mohammed Jalees said
நடப்பு அரசியலை உடன் அறியத்தந்த காத்தான்குடி வலைமனைக்கு நன்றி.
kkymovlavi said
அன்பின் தோழர்களே!நமது சமுகத்தின் எதிர் கால அரசியல் விடயம் பற்றி சிந்திக்ககூடிய அரசியல் மாமார்கள் யாரும் இல்லை.நேரம் வரும்போது தாளம் போடுபவர்கள்.வீணை வாசிப்பதற்கு சில வீணர்களும்
கூத்தடிப்பதர்கு பல கூத்தாடிகலும் வளம் வருவார்கள் இதல்லாம் எமது மக்களுக்கு பார்த்து புளித்து போனவை.எமது மக்களுக்கு தற்போது உள்ள பிரைச்சனைக்கு தீர்வு சொல்லி செரியான வலியில் வழி நடாத்தக்கூடிய ஒருவரை நாம் தெரிவு செய்து எடுக்கவேண்டும்.
அவ்வாறு நாம் நோக்கும்போது இவர்களில் எவரும் தகுதி அற்றவர்கள்.தம்பி ஹிழ்பு பிரதேச வாதம் போன்ற
பிரச்சினைகளை உருவாக்கியவர்.அமைச்சர் அமீரலி அதற்கு உரம் போட்டவர்.மொவ்லானா ஒன்றும் புரியாதவர் சமுக உணர்வு அற்றவர். எனது அன்பின் சமுகமே!இவர்களால் ஒரு கணேசமூர்தியை பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கமுடியும்.இதுதான் உண்மை நிலவரம்.
தம்பியைப் பற்றி பேசினால் நம்மில் சிலருக்கு புல்லரிக்கும் இது புலிக்குப் பின்னால் ஓடும் ஆட்டை போன்று
தம்பியை வளர்த்தவர்கள் தலையில் கை வைத்து அழுது தவ்பாவும் சைது விட்டார்கள் அவர்களில் நானும் ஒருவன் தயவு செய்து யாரும் பாவ காரியங்கள் செய்வோரை எம் சமுகத்தில் வளர்த்து விட வேண்டாம்
ஒங்கள் வாக்கு மிகவும் பலம் வாய்ந்தது அதனால் மிகவும் ஆழமாக சிந்தனை செய்து உங்களின் எதிர் கால
ஐந்து வருடங்களுக்கும் உண்மையான ஒருவரை தேர்ந்து எடுக்கவும்.இறைவன் அல்லாஹ் நம்மை ,நமது சமுகத்தை பாவிகளிடம் இருந்து பாதுகாப்பாயாக.ஆமீன்
kkymovlavi said
தம்பி ரொக் நீங்க சிந்தனையால் சிறந்தவர் நாங்கள் யாரும் தம்பிக்கு எதிரிகள் அல்லர் தம்பி என்ம்பியானாலும் சரி ,அமைச்சரானாலும் சரி ,எமது சமுகத்திற்கு ஒரு பிரயோசனமும் இல்லை காரணம் இவர்
ஏற்கனவே அரை அமைச்சராகவும்.மகான சபயில் பல கந்தல் அமைச்சு பதவிகளுடன் இருந்தவர் இவரால்
நடந்த சேவைகள் பல இருப்பினும் எமது ஊரில் கலவிற்கு ,பாதுகாப்பிற்கு,படித்தவர்களுக்கு தொழில் வழங்குவது ,தொழில் பயற்சி நிலையங்களை உருவாகுவது ,போன்ற பல விடயங்களை செய்யும் வாய்ப்பு இருந்தும் .செய்யவில்லை . இவராசெய்ய போகிறார் ?
இவர் செய்தவை இயற்கை காற்றின் சுவாசத்துடன் பல அறிவு சார்ந்த நூல்களை எமது மாணவர்கள் வாசித்தும்
படித்தும் வந்தார்கள் காத்தான்குடி பொது வாசிகசாலையில்.எங்கே எமது நூலகம்.மேலும் தேசிய கல்லூர்யில்
சயன்ஸ் லேப் உள்ளில் இருந்த சாதனங்கள் எங்கே?கல்வி பயிலும் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல கட்டிடங்கள் வளர்வதால் கல்வி வளர்ந்து விட்டது என்பது அர்த்தமல்ல
தம்பி ரொக் கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளால் பிரயோசனம் அடைந்தவர்கள் அன்னியவ்ர்களே! பல பெறுமதி மிக்க வேலை வாய்ப்புக்கள் பணத்துக்காக தாரை வார்க்கப்பட்டன
முதல் அமைச்சர் பதவி கை நழுவி பிள்ளையான் தலையில் விழுந்தது போன்று மட்டு மாவட்ட பிரதிநித்துவம் இம்முறை கணேசமூர்த்தி தலையில் விழும் இது அரசியல் கல நிலவரங்களில் இருந்து
தெளிவாக விளங்க கூடிய விளக்கம் .
ABC Groups90 said
எவை எப்படியிருந்த போதிலும் தம்பியின் இறுதிக்கூட்டம்தான் அதி விசேசம். அங்குதான் நல்லதொரு படம் காட்டப்படும். அதனால் பிரபல இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர் அனைவரும் நேரகாலத்தோடு சென்று எவ்வாறு அவற்றை வெற்றிப்படமாக்கலாம் என்பதை ஆலோசித்துக்கொள்க.
இப்படத்தில் சமூக ஒற்றுமை, ஊர் அபிவிருத்தி, மஹ்ஸர் மைதானம் எல்லாம் நினைவு படுத்தப்படும். கிளைமக்ஸ் என்னவென்றால் இறுதி நேரத்தில் தம்பி தேம்பித் தேம்பி அழும் காட்சி. இதனைப் பார்க்கும் அல்லது விஷேட வானொலியூடாகக் கேட்கும் மகளிர் நெஞ்கங்களும் அழும். எனவே தம்பியின் இறுதிப் படத்தைப் பார்க்கப் போகும் அல்லது கேட்க இருப்பவர்கள் கட்டாயம் கைக்குட்டையை தவறாமல் தங்களோடு வைத்துக்கொள்ளுமாறு முன்னெச்சரிக்கை செய்கிறோம்.
சென்ற பொதுத்தேர்தலில் மகளிர் உம்மத்துக்களுக்கான ஒவ்வொரு Pocket Meeting யிலும் தம்பி கூறியது ஞாபகமிருக்கலாம். ‘எனக்கு வாக்களிக்காவிட்டால் எமது ஊர் மன்னார் முஸ்லிம்களைப் போன்று சொப்பிங் பேக்குடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்’.
இப்போது இவற்றைச் சொல்லி மகளிர் உம்மத்தை மடையர்களாக்க முடியாதலால்- பல பல கற்பனைகளை எடுத்துவிடுகிறாராம்.
நாங்கள் அறியாததை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
Son of kky said
Dear ABC Groups!
அங்கே மேடையிலே புலி வருது புலி வருது பாட்டு போடுவாங்காலாமா?
Mohammed hanfal said
kattankudy info Thank you so much for your updation
Husain said
Salam Bros. & Sisters
the way web admin answering & putting newws seems, admin against Bro. Hisbullah. Admin should be neutral person??? It is not. Insha Allah, UPFA will get minimum 1 seat, that will be a Muslim and if tamil people will cast 30,000 votes to UPFA, then there will be 2 seat for UPFA (1 Muslim & 1 Tamil or 2 Muslims). If you are against Bro. Hisbullah, no matter. But you should realize the truth and you are the people trying to turn the vote to non.
tc
kattankudi said
Dear Bro Hussain,
This site is not against to Hizbullah or others. The article that we published The current political situation of Batticaloa District. You should look our previous articles and Members comments.
Thanks.
Moderator.
hajiyar said
Dear kkymovlavi,
உங்களைப் போன்றவர்கள் கூட இருதால் ஹிஸ்புல்லாஹ் மட்டும் இல்லை எந்த கொம்பனும் மக்களுக்கு நல்லது செய்ய விட மாட்டீர்கள்.
நீங்கள் உண்மையில் ஒரு மௌலவியாக இருந்தால் நீங்கள் அடிக்கடி சொல்லவரும் அந்த ஐந்து வருடங்களுக்கு சரியான
முஸ்லிம் பிரதிநிதி யார்.??? யாரும் தற்போது இல்லை என்று முட்டாள்த்தனமாக பதில் சொல்ல வேண்டாம்.
நீங்கள் எல்லாம் காலம் கடந்த பின்பே மக்களை வழிநடத்த (கெடுக்க) முன் வந்து இருக்கிறீர்கள். என்னைப் பொறுத்த வரை நீங்கள்
மௌனம் காப்பதே சாலச் சிறந்தது. ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு ‘when the blind lead the blind,both shall fall into the ditch’
nalanvirumbi said
You are Dame right haji the blind leads ( Hisbullah)the blind (hajiyar ) both shall fall into ditch
Mohamed Karamy said
இதனிடையே ஹிஸ்புல்லாஹ்வின் சிபாரிசின் பேரில் செலிங்கோவில் பணியாற்றி அலுவலக நடைமுறைகளை மீறி கடன்களை வழங்கிய இருவரின் உதவியுடன் கடன் தொடர்பான ஆவணங்களின் மூலப்பிரதிகள் அடங்கிய கோப்புகள் ஹிஸ்புல்லாஹ்வினால் அகற்றப்பட்டு விட்டமையால், சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் இந்நிறுவனம் இருக்கிறது.
Proud of Hizbullah’s hellped by Mohamed ……… former Manager of Celinco Inv Ltd.Nowedays He doing a mobile phone bisness infront of Closed Ceylinco Bank Branch of Kattankudy.He contining prout activities in his bisness in ……. Mobile shop, Meera shopping coplex, main street, Kattankudy.Please my dear friends we must band and should be stop of Mr. ………. proud behavior in our town.
சிலிங்கோ ஏமாற்றப்பட்டோர் சங்கம் said
Dear Brother Mohd Karamy! Could you please give us a clear view on this subject. Who is that brother helped for that big robbery? How can we get the document which was theft /fired . Your useful information will be highly appreciated. Thanks.
kattankudi said
Dear Viewer: Karamy sent the comment with a name. We have edited the comment as per comment moderation policies in place.
For your kind information please.
WebAdmin
Kalisara said
“ஆனாலும் தமிழ்த் தரப்பு திட்டமிட்டு செயற்படுமிடத்து 30,000 விருப்பு வாக்குகளை ஆளும் தரப்பு வேட்பாளர் ஒருவருக்கு திரட்டுவது அவர்களுக்கு இலகுவாகவே அமையும் என்பதுடன், இந்த எண்ணிக்கையை ஹிஸ்புல்லாஹ்வோ அமீர் அலியோ அடையப் போவதில்லை என்பது வெளிப்படை.”
இவ்வாறு விருப்ப வாக்குகளை தமிழர்கள் கனேசமூர்த்தி அவர்களுக்கு வழங்கினால் UPFA க்கு சுமார் 88000 மொத்த வாக்குகள் கிடைத்து விடும்.அது எவ்வாறு என்று நிறுவினால் தமிழ் வாக்குகள் – 30000, ஹிஸ்புல்லாஹ் – 23000, அமிரலி – 20000, அலிசாஹிர் மெளலானா- 15000 ஆக மொத்தம் 88000 வாக்குகள் வரும். தமிழர்கள் இவ்வாறு UPFA க்கு 30000 வாக்குகள் போட்டால் TNA இன் வாக்குகளில் அது சுமார் 25000 குறைவை ஏற்படுத்தும். அப்போது TNA இன் வாக்குகல் குறைய ஒரு வேளை 3:2 என்ற முடிவுகளோ அல்லது 2,1,1,1 யென்னும் 2000 ம் ஆண்டு வந்த முடிவுகளோ வரலாம். ஆகவே நீங்களும் உங்கள் கட்டுரையும் ஒரு west flow…. நமது மகனே சுமார் 25000 மேல் விருப்ப வாக்குகள் பெற்று இன்ஷா அல்லாஹ் வெல்லுவார். I’m sure. No hasitation about our leader victory.
சிலிங்கோ ஏமாற்றப்பட்டோர் சங்கம் said
Thanks a lot 4 ur reply [#22] by the WebAdmin.
ihsan said
bro kalisara neengal kala nilavarathi therinthu than commence kodukkireerkala i think neengal kinatrukkul irunthu kondu vaanathai paakkinreerkal poala ameer ali 20000 moulana 15000 hisbu 25000 mlakkukal vote panninaalthan pera mudiyum bro kalisara neengal oru tamil makanukku vote pannuveengalaa enna sir thinking please ungal hisbu ervur moulanavukku omd alikku preference vote kooda panna vendaam enru sollukinraar mayorkku inippoaka idamillai nambitteengala mayor in vote viluvathe sure illai ippadittaan akileshvaran(10000vote) thanathu sontha vottaikkooda poadavillai ithu palaya kathai theriyumaa?
kkymovlavi said
ஹாஜியார் தம்பி உங்களின் ஆங்கில முட்டாள்களின் பாலாய்ப்போன பழமொழிக்கு சகோதரர் நலன்விரும்பி தகுந்த் பதிலை கொடுத்துவிட்டார்.உங்களின் கனவுகள் யாவும் கலிமன் முட்டாள் கட்டிடம் கட்ட ஆசைப்பட்ட
கதைதான்.தம்பி வெல்லுவான் முருகனும் ,சிவனும்.காஜாவும்,புத்த் பெருமானும் ஆசிர் வழங்கி வழியனுப்புவார்கள்.மாகாண சபைக்கு.கொஞ்சம் பொறுமையாய் இருங்கோ ஹாஜி தம்பி
hajiyar said
என் கேள்விக்கு என்ன பதில் kkymovlavi? (அடுத்த ஐந்து வருடத்துக்கு பொருத்தமான நபர்)
ஆக்க பூர்வமான பதில் இல்லை என்றால், அதைச் சொல்லும் பக்குவம் கூடவா இல்லை உங்களுக்கு. எங்களைப்போல 8 ஆம் வகுப்பு கேஸ்களுக்கு உங்களைப்போல உலமாக்கள் மாற்று வழியைக் காட்டினால்தானே விளங்கும்.
ABC Groups90 said
1994ல் ‘நெஞ்சுக்குள்ள இன்னாரென்று சொன்னாப் புரியுமா…..’
1999-2000 காலப்பகுதியில் ‘படையப்பா……’ போன்ற பாடல்கள் தம்பியால் முழங்கப்பட்டன. ஆனால் இம்முறை தம்பி பல வண்டவாளங்களை மறைக்க வேண்டியிருப்பதால் அழுவதும் மஹ்ஸரும் தான் தம்பியின் கிளைமக்ஸ்.
kkymovlavi said
தம்பி வருகிறான் தம்பி வருகிறான்
வெல்ல போகிறான் வெல்ல போகிறான்
செய்யபோகும் சேவை பாரு சேவை பாரு
கிடைக்க போகும் அமைச்சு பதவி
தம்பி வருகிறான் தம்பி வருகிறான்
தம்பி சொல்லும் பொய்யப்பா தாகம் தீர்க்கும்
வஞ்சமப்பா.நான் சொல்லும் உண்மைய்யப்பா
ஹாஜியாரும் .களிசரையும் கொடை பிடிக்கும்
காலமப்பா தீயோரின் சொல்லை தட்டி விடபப்பா
குண்டர்களும் தொண்டர்களும் ஊதியம் பெரும் நாளப்பா
எட்டப்பர்களுக்கு கிடைக்க போகும் தீர்ப்பை பாரு
வாக்கு போட்ட மக்களின் வாழ்கையை பாரு
காஜாவும் .குஜாவில் கல்லு குடிக்கும் காட்சி பாரு
முருகனும் ,சிவனும் கை தட்டி வளி யனுப்பும் காட்சி பாரு
தியோர் பேச்சை கேட்காதே கேட்காதே
உண்மை வெல்லும் வாய்மை பாரு
தம்பி தோல்வி நிஜம் பாரு தாங்க முடியா ஹாஜி பாரு
தாவி திரியும் தொண்டர் பாரு தாங்க முடியா இரங்கல் பாரு
முட்டாள் பேச்சு கெட்டு போகும் கேட்ட பின்பும் கேடாகும்
சொல்லு சொல்லு உரக்க சொல்லு தோற்க போகும் நிலைமை சொல்லு
Dear KWC!!இதில் ஏதும் தவறுகள் இருப்பின் திருத்தி போடவும் இப்படிக்கு உங்களின் kkymovlavi wassalaam
kkymovlavi said
அன்பின் ஹஜியாரே !அடுத்து வரும் ஐந்து வருடத்துக்கு தம்பி மில்லத் லிங்கோ தகுதி அற்றவர் என்றுதானே நான் கூறினேன் நீங்கள்தான் உங்கள் வாக்கை வைத்து தீர்மானிக்க வேண்டும் முதலில் உண்மையான முஸ்லிமாக இருக்கவேண்டும் முனாபிக்காக இருக்க கூடாது பொய்சொல்ல கூடாது உண்மை பேசுபவராக இருக்கவேண்டும் டூப்பு அடிக்க கூடாது சமுக உணர்வு வேண்டும் சமுகத்தை காட்டி கொடுக்க கூடாது கேவலம் வாக்கு பிச்சைக்காக நமது பெண்களிடம் சென்று ப்ளீஸ் எனக்கு வாக்கு போடுங்கோ இல்லாவிட்டால் நாளை மறுமையில் நீங்கள் அனைவரும் பதில் சொல்லவேண்டும் என்று அழுவது இது என்ன கேளிக்கையான விடயம் சத்தியமாக தம்பி மில்லத் லிங்கோ தான் அல்லாஹ் விடம் அதிகம் பதில் சொல்லவேண்டியவர்.காரணம் நமது சமுகத்தின் பேரால் மிகவும் துரோகம் செய்த ……….
பாவம் செய்த ……… அப்பாவம் எப்பாவம் என்று அறியாது நடத்தும் நாடகம் நாடக மேடை கூ ட வராது நாளைய சமுகம் இவரை விடாது சொல்லுங்கள் தெய்வ குற்றம் நின்று கொள்ளும்
Nawaz said
well written, thnx for an objective piece of analyzes.