நாட்டிலிருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு யுத்தம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்தின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அம்பாரை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
2013.06.18 ஆம் திகதி செவ்வாய் கிழமை மாலை 7 மணிக்கு காய்ந்த விறகுகளை ஏற்றி வந்த ஆறு வண்டில்களை பொலிஸார் கைப்பற்றியதையடுத்து பொது மக்கள் வண்டில்களையும் இஉரிமையாளர்களையும் விடுவிக்குமாறு குட்டிக்காரச்சி பிரதேசத்தில் வைத்து வீதி மறியல் போராட்டத்தில் இரங்கினார்கள். Read the rest of this entry »
அரசியலமைப்பின் மீதான 13 ஆவது திருத்தச் சட்ட மூலமும் அதனடியாக மேகொள்ளப்பட்ட மாகாண அலகுகளுக்கான அதிகாரப் பரவலாக்கமும் : முஸ்லிம்களின் அடைவுகளும் பின்னடைவுகளும், இருந்தவற்றையெல்லாம் இழந்த பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் ஏன் இன்று தென்னிலங்கையிலும் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலையில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.. ? Read the rest of this entry »
கிண்ணியாவில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் இடம்பெற்றதையடுத்து பதற்ற நிலை தோன்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வண்டில்களில் விறகு ஏற்றிவருவோரின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவர்களை இடைநிறுத்தி தடுத்துவைத்ததை அடுத்து படையினருக்கும் பொலிசாருக்கும் முறுகல் தோன்றி மோதலாக மாறியதாக அறியக்கிடைக்கிறது.
இந்த நாட்டிலே அரசியல் தீர்வொன்றின் மைல்கல்லாக விளங்கிய 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்த சட்ட மூலம் அறிமுகப் படுத்தப்படிருக்கின்றது. இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தில் வந்த மாகாண சபையின் முறைமையின் ஊடாக இன்று அமர்ந்து பேசுகின்றோம் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தண்டாயித பாணி தெரிவித்தார். Read the rest of this entry »
2013 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட விளையாட்டு நிகழ்வில் இன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது. மேலும் ஏற்கனவே நடைபெற்று முடிந்த எறிபந்து, எல்லே போட்டிகளிலும் இப்பாடசாலை வெற்றி பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »
பெண்கள் பொது இடத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுவது அருவருக்கத்தக்க செயல் என சிற்றுண்டிச்சாலையொன்றில் வாடிக்கையாளரொருவர் பெண்ணொருவருக்கு கூறியதையடுத்து நூற்றுக்கணக்கான டென்மார்க் தாய்மார் கொபன்ஹெகன் நகர மண்டபத்திற்கு வெளியே குழந்தைகளுக்கு தாய்பாலூட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டம் ரைனி மரியா லார்சன் என்ற தாயினால் பொது இடத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதனை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. Read the rest of this entry »
அரசியலமைப்பிலிருந்து 13ஆவது திருத்தத்தினை அகற்றுவதற்கான சட்ட மூலம் ஜாதிக ஹெல உருமயவனால் சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
‘அரசியலமைப்பிற்கான இருபத்தோராவது திருத்தம்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த சட்ட மூலம் தனிநபர் சட்டமூலமாக ஜாதிக ஹெல உரும பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரோவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.(A2)
அனுராதபுரம் நிவந்தக சைத்திய கல்லுரியின் அதிபர் ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் அனில் புஷ்பானந்த என்பரின் மகனால் இன்று தாக்கப்பட்டார்.
விடுமுறையின்போது மேலதிக வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டபோது அதே பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவனால் அதிபர் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.(A2)
காத்தான்குடி நகர சபையின் கூட்ட தீர்மானமின்றியே காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயல் மையவாடிக்காணியை காத்தான்குடி நகர சபை தலைவர் அத்துமீறி வேலி போட்டு அடைத்ததாக காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சி;ககான மக்கள் இயக்க(சுயேட்சைக்குழு) உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நழமி இன்று நீதிமன்றத்தில் நீதிபதி என்.எம்.அப்துல்லாவிடம் தெரிவித்தார்.
காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் மையவாடிக்காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்தது; தொடர்பிலான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது இதன் போதே காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி நீதிபதியிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களில் பொது மக்;களுக்கு தூய குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்காக பவுசர்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (18) நடைபெற்றது.
பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் சுற்றாடலில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன- பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் தற்காலிகக் கட்டுமானங்களின் எண்ணிக்கையினக் குறைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத் தேவைகளை கருத்திற்கொண்டு முடிந்தவரை நிரந்தரக் கட்டடங்களை அமைப்பதில் அக்கறை செலுத்துமாறும் அதிகாரிகள் அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் அப்துல்சலாம் யாசீம் நேற்று 17ம் திகதி ரொட்டவௌ முஸ்லிம் வித்தியாலயத்தின் சிற்று_ழியரான ஐ.எம்.நிஸாரினால் தாக்கப்பட்டு மகதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் தன்னை தாக்கியதாக கூறி மொறவௌ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதனையடுத்து தாக்கியவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட வேளை அரசியல்வாதிகள் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
‘தேசத்துக்கு மகுடம் 2014″ கண்காட்சி தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று நேற்று (17) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அத்துடன் அம்பாறையில் நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி 2013 கண்காட்சியின்போது அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 6.2 வீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டு வருகிறது எனினும் ஆகக் குறைந்த கட்டணமான ஒன்பது ரூபா மாற்றமின்றி இருக்கும்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தலைமையில் நேற்றைய தினம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் பிராந்திய பஸ் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது
கிழக்கு மாகாணசபைக் கூட்டம் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகி ஆளும் கட்சியினர் பங்கேற்காத நிலையில் கிழக்கு மாகாணசபைக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
சற்று முன் கிடைத்த தகவலின்படி கிழக்கு மாகாண முதமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களும் சபைக்கூட்டத்தல் பங்கேற்று எதிர்கட்சி உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்ததாக தெரியவருகிறது. Read the rest of this entry »
காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தலைவர் எம்.ஹமீட் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜேர்மன் பயணமானார்கள்.
ஜேர்மன் நாட்டில் நடைபெறும் உள்ளுராட்சி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இந்த இரண்டு உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களும் ஜேர்மன் பயணமாகியுள்ளனர். Read the rest of this entry »
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் டியாகோ மாரடோனா. கால்பந்தாட்டத்தில் பல சாதனைகளை படைத்துள்ள இவரின் உருவம் மற்றும் கையெழுத்தை சீனாவைச் சேர்ந்த ‘தி9‘ என்ற நிறுவனம் இணையத்தள கார்ட்டூன் விளையாட்டில் பயன்படுத்தியுள்ளது. இதற்கு மாரடோனாவிடம் இருந்து அவர்கள் முறையான அனுமதி பெறவில்லை.
இதைபற்றி அறிந்த மாரடோனா தனது படத்தையும் கையெழுத்தையும் தவறாக பயன்படுத்தி விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்தின் மீதும், இணையத்தில் வெளியிட்ட ‘சினா‘ நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்தார். Read the rest of this entry »
சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலொன்று சவூதி அரேபியாவிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த போது மும்பை அருகே கடலில் இரண்டாக முறிந்து போனது. கப்பலிலிருந்த சுமார் 4,500 கொள்கலன்கள் (கண்டெய்னர்ஸ்) கடலில் மூழ்கியுள்ளன.
316 மீட்டர் நீளமுள்ள அந்த சரக்குக் கப்பல் சிங்கப்பூரைச் சேர்ந்தது. சவுதி அரேபியாவில் இருந்து 4 ஆயிரத்து 500 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு அரபுக்கடலில் மும்பையிலிருந்து 840 (நாட்டிகல் மைல்) நீர்க்கல் தொலைவில் வந்துகொண்டிருந்த போது Read the rest of this entry »
காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இன்று காத்தான்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் மைய்யவாடிக் காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்த வழக்கு தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர்களையும் 18ம் திகதி இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பானை அனுப்பியிருந்தது.
2001-ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதையடுத்து, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த தலிபான்களை அமெரிக்கா தாக்கி அழித்தது. அதன் பிறகு ஹமீத் கர்சாய் தலைமையில் அங்கு அரசு அமைந்தது. இந்த அரசுக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராகவும் தலிபான்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.
போர் முடிவடைந்ததையடுத்து, அடுத்த இரு வருடங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறுகிறது.
தங்கல்லை பிரதான வீதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றின் மீது இன்று காலை பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை அறுக்கக் கூடாது எனக்கோரி கொழும்பு நோக்கி பாதயாத்திரை செல்லும் குழுவினரே இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ‘விடிவௌ்ளி’க்குத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட விளையாட்டுப் போட்டிகளில் 19 வயதின் கீழ் கரம் சுற்றுப்போட்டியில் ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயம் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகி உள்ளது.
மேலும் எறி பந்து (Throw Ball) விளையாட்டில் ஏறாவூர் ரஹ்மானியா மகாவித்தியாலயம் இரெண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது.
காத்தான்குடி நகரசபை முதல்வர் SHM. அஸ்பர் மற்றும் நகரசபை உறுப்பினர் MSM. சியாத் ஆகியோரை கைது செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் மன்ற நீதிபதி இன்று பொலிசாருக்கு உத்தரவிடுள்ளார்.
மேலதிக விவரங்களை விரைவில் எதிபாருங்கள். இணைந்திருங்கள் இன்போவுடன்
மினுவாங்கொடை- புருலப்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகளின் சீருடை தொடர்பாக அண்மையில் எழுந்த பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளது.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் தொடர்பு கொண்டு இது விடயமாக தெளிவுபடுத்தியதன் பயனாகவே இந்த குழப்ப நிலைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.எம். சுஹைதர் தெரிவித்தார். Read the rest of this entry »
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முதலாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் (17.06.2013) திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட பொலிசாரினதும் மற்றும் பொலிஸ் ஊழியர்களினதும் நன்மை கருதி நூலகத்தை கிழக்குப் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைத்தல் எதிர்ப்பு தினத்தை யொட்டி இடம் பெற்ற சமுர்த்தி கொடி விற்பனையின் மூலம் 79இலட்சத்து 19843ரூபா பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்ணம் தெரிவித்தார்.
இன்று தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வடக்கு கிழக்ககிலிருந்து தென்னிலங்கை நாம் கொண்டு சென்றமையும் பிரதான காரணம் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிபபிட்டார்.
கொழும்பு வை எம் எம் ஏயில் நடைபெற்ற முஸ்லிம் சமூகம் எதிர் நொக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயும் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். Read the rest of this entry »
19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொண்டு 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென கிண்ணியா தளவைத்தியசாலையில் இருந்து திருகோணமலை ஆதாரவைத்தியசாலைக்கு கர்ப்பினித் தாய் ஒருவரை இடமாற்றம் செய்ய முயற்சித்த போது கிண்ணியா வைத்தியசாலை வளாகத்திலயே அம்புலன்ஸ் வண்டியில் பிரசவம் நடைபெற்றுள்ளது.
இது பற்றி சம்பந்தப்பட்டவரின் உறவினர் கருத்து தெரிவிக்கையில்,
கல்முனைப்பிரதேசத்தில் ”ஒளிரும் கல்முனை- திதுலன” என்ற தொனிப்பொருளில் 51 திட்டங்கள் அடங்கலான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்துவதற்கான திட்டங்களை திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸினால் முன்னெடுத்துச் செல்லப்பட இருக்கின்றது.
இத்திட்டங்கள்பற்றி தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு எச்.எம்.எம். ஹரீஸின் தலைமையில் இன்று (17) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாத்தரை மாவட்டத்தில் பிட்டபெத்தர என்ற கிராமத்துக்கான குடிநீர் விநியோகத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (17) காலை அலரி மாளிகையில் இருந்தவாரே செய்மதி தொழில்நுட்பத்தினூடாகத் திறந்துவைத்தார்.
பிட்டபெத்தர பிரதேசத்தில் 4 கிராம சேவவர் பிரிவுகளில் வசிக்கும் 6000 பொது மக்கள் இந்தத் திட்டத்தினால் நன்மையடைவர்.
வட மேல் மற்றும் மத்திய மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (17)அலரி மாளிகையில் நடைபெற்றது.
இவ்விரு மாகாணங்களிலும் மஹிந்த சிந்தனை தூரநோக்கு திட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இரண்டு விரல்களினால் மாத்திரம் மோட்டர் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை திருத்தும் வேலையில் கடந்த 30 வருடங்களாக ஒருவர் ஈடுபட்டு வருகின்றார்.
பிறப்பிலிருந்து கையில் இரண்டு விரல்களை கொண்டுள்ள சாகுல் ஹமீத் பக்கீர் முகைதீன் எனப்படும் இவர் புதிய காத்தான்குடி ஹிழுறிய்யா பள்ளிவாயல் வீதியில் வசித்து வருகின்றார்.
குவைத் சிட்டி: குவைத் பாராளுமன்றத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கலைத்துள்ளது.
குவைத் பாராளுமன்றத்தை, 50 உறுப்பினர்கள் உள்ளனர். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும், நான்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 2006ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் வழி செய்தது.
எதிர்க்கட்சியினர் இதை எதிர்த்தனர். இந்த சட்டப்படி, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த தேர்தலை செல்லாது, என அறிவிக்கக் கோரி, வழக்கு தொடர்ந்தனர்.